india 1
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

இந்தியாவில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்!

Share

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது  முககவசம் அணிவது, சமூக இடைவெளியைப் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் கேரளாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர் விபி ஜாய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் கீழ் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசு சமீபத்தில் இரத்துச் செய்தது. ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்த பின்னர், மாநிலத்தில் அனைத்து பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...