sarath fon
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆடிய ஆட்டம் அடங்கும்; அரசு கவிழ்ந்தே தீரும்! – பொன்சேகா சூளுரை

Share

“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ளது.

எதிரணியில் உள்ளவர்களும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுவர்களும் மற்றும் அரசுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களும் என 113 இற்கும் மேற்பட்டோர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

எனவே, இந்த அரசு உடனடியாகக் கெளரவமாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக இந்த அரசை அகற்றுவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...