colombo 6
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதித்தடைகளால் பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதம்!

Share

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கிவரும் நிலையில், கொழும்பில் பல இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி வீதித்தடைகளைப் பொலிஸார் போட்டுள்ளனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கு அருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காலிமுகத்திடல் போராட்டக் களத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் செல்கின்றனர்.

அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பேரணியாக செல்லும் வழியில் லோட்டஸ் வீதிக்கருகே போடப்பட்டிருக்கும் வீதித் தடைக்கருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...