Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களின் போராட்டத்தை சிங்கள மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர்! – சிறந்த மாற்றம் என்கிறார் செல்வம்

Share

” தமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்பதை சிங்கள மக்களும் இன்று ஏற்க ஆரம்பித்துள்ளனர். அது பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது சிறந்த மாற்றமாகும். ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் இருந்திருந்தால், இந்நேரம் தமக்கு உணவளித்திருப்பார்கள் என சிங்கள மக்கள் கருதுகின்றனர். அவ்வாறு உணவு பொதி வழங்கப்பட்ட வரலாறும் உள்ளது. அரசுக்கு எதிராக மூவின மக்களும் போராடுகின்றனர். சிறந்த புரிந்துணர்வு வந்துள்ளது.

ரம்புக்கனையில் கொல்லப்பட்டவருக்கு வடக்கு, கிழக்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. காலி முகத்திடல் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் நாம் அனைவரும் ஒன்றுமையாக வாழ வேண்டும். எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 17
இலங்கைசெய்திகள்

சரத்பொன்சேகாவிடம் உள்ள குரல் பதிவு- காணொளிகளை வெளியிடுமாறு நாமல் வலியுறுத்து

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொளிகள் இருந்தால் அதை அவர்...

4 17
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த மிக இரகசிய உத்தரவு

இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ்...

2 17
இலங்கைசெய்திகள்

15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு...

images 1
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது...