ராஜபக்ச குடும்பத்தினர்
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பம் இனி வீதியில் இறங்கவே முடியாது! – ஜே.வி.பி. தெரிவிப்பு

Share

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக இருக்கும் திருடர்களைப் பாதுகாப்பதற்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது. அவர்கள் ஹோட்டல்களிலோ, வீடுகளிலோ, எங்கேனும் தனி அறைகளிலோ அல்லது நிலத்தின் கீழான பங்கர்களிலோ பதுங்கியிருக்க முடியுமே தவிர வெளியில் அவர்கள் தலைகாட்ட முடியாது.

அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் வெளிநாட்டுப் பொலிஸாரின் உதவியோடு அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியோடு அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...