இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு புதுடில்லியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்புகளில், இலங்கை – இந்தியா இடையேயான ராஜதந்திர உறவுகள் மட்டும் நிதி உதவிகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
#SriLankaNews
Leave a comment