Sri Lanka Bakery Owners Association
செய்திகள்இலங்கை

30 ரூபாவால் அதிகரிக்கிறது பாணின் விலை???

Share

பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவிகையில்,

மா வழங்கும் நிறுவனங்கள் மாவின் விலையை 35 – 40 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி 450 கிலோகிராம் பாணின் விலை 20 ரூபா – 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய காரணங்களால் மிகப்பெரும் நெருக்கடியை பேக்கரி துறை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இயங்கும் 6 ஆயிரம் பேக்கரிகளில் தினசரி உற்பத்திகள் 50 வீதம்கூட இல்லை – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...