strike
செய்திகள்இலங்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திங்களன்று தொழிற்சங்க போராட்டம்! – வடக்கு உத்தியோகத்தர்களும் ஆதரவு

Share

தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடு தழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்ட கால அடிப்படையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள், மேலதிக கொடுப்பனவுகள், பதவியுயர்வு மற்றும் ஏனைய தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடமாகாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்கி குறித்த போராட்டத்தை வெற்றிபெற செய்வோம்.

எனவே குறித்த தினத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களுக்கு சுகயீன விடுமுறையை உரிய முறையில் அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இதை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...