திலும் அமுனுகம
செய்திகள்அரசியல்இலங்கை

விமல், கம்மன்பிலவை வெளியில் விடாதீர்கள்! – திலும் திடீர் ‘பல்டி’

Share

“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”

-இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது.

ஶ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன வழமைபோல் தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார்.

பங்காளிக் கட்சிகளின் மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்துக் காலைவாரிவிட்டார்” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...