WhatsApp Image 2022 03 03 at 7.49.29 AM
அரசியல்இலங்கைசெய்திகள்

மூவேந்தர்களை சாடிய அதாவுல்லா!

Share

இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கானதொரு பொருளாதாரக் கொள்கையோ அல்லது வெளிநாட்டுக் கொள்கையே நிலையானதாக இல்லை. எனவே, எமது நாட்டுக்குரிய அரசமைப்பொன்று இயற்றப்பட வேண்டும்.” – என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகளின் விசேட கூட்டமொன்று நேற்று (02.03.2022) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அதாவுல்லா மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கே உரித்தான அரசமைப்பொன்று இல்லை. எமது நாட்டில் பெறுமதிமிக்க பல வளங்கள் இருந்தம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைத் திட்டமொன்று இல்லை.

எமது நாட்டு வளங்களை சூறையாடவே சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுத்தனர். அதேபோல வளங்களை இலக்கு வைத்தே வெள்ளையர்களும் எமது நாட்டைக் கைப்பற்றினர். பிற நாடுகளில் இல்லாத பல செல்வங்கள் எமது நாட்டில் உள்ளன. அப்படி இருந்தும் டொலருக்காக நாம் கையேந்திக்கொண்டிருக்கின்றோம்.

டொலரை தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. எம்மை தேடி டொலர் வரும் விதத்தில் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான கொள்கைத் திட்டம் அவசியம். அது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் நான்கு இனத்தவர்களே வாழ்கின்றனர். எனவே, எமது நாடு ஏதோவொரு விதத்தில் குழப்புவதாக இருந்தால் இனங்களுக்கிடையில் திட்டமிட்ட அடிப்படையில் குரோதம் – குழப்பம் ஏற்படுத்தப்படுகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கியமாக வாழ வேண்டும். அப்போது நாடு மேம்படும்.” – என்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...