செய்திகள்இலங்கை

சிமெந்து, பால்மா வரிகள் நீக்கம்!

Share

சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பால்மா, சிமெந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் விரைவில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும்.

இதேவேளை விரைவில், பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அரிசி, சீனி, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையும் உண்மையே. இருப்பினும் தற்போது நாட்டில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

எதிர்வதும் 7ம் திகதி ஹம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள சிமெந்து தொழிற்சாலை மூலமாக மூன்று மில்லியன் சிமெந்து மூடைகள் மாதமொன்றுக்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும். அத்துடன் சிமெந்து இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை நீங்குவதற்கும், சிமெந்து வரியை நீக்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...