SureshPremachandran
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கள்ளச் சந்தையில் ஆயுதக் கொள்வனவு! – அமெரிக்க விசாரணை அவசியம் என்கிறார் சுரேஸ்

Share

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில் ராஐபக்‌ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .

தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாக கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.

ஆனால் 2005 ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்காக பல கோடிகளை செலவிட்டு ஆயுதங்களை கொள்வனவு செய்தது.

முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வேண்டியதாக கூறுகின்றார்கள். வடகொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்கு கடன்களாக இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவ தளபாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால் பசில் ராஜபக்ஸவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்க பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவுக்கும் தெரியும். அன்றைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்க பிரஜையாக இருந்தவர்கள்.

அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர்களை கடத்தி அங்கிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அமெரிக்க அரசு பசில் ராஜபக்ஸவை மாத்திரமன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழிநடத்திய தலைவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது.

யுத்தத்திற்காக கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம்.

ஆகவே இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப்போவது கிடையாது. ஆனால் இவற்றை மேற்கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படையிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந்தபட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பசில் ராஐபக்ஸவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம்.

ஆகவே இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும்
தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச் சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது. ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை.

ஒரு பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்க பிரஜையை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...