union budget 2021 2022 1 1024x683 1
செய்திகள்இந்தியா

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் – யாருடைய தலை உருளும்!!

Share

இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றவுள்ளார்.

அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார்.

நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 2022- 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வருமானவரி சலுகை, பொருளாதார வளர்ச்சிக்கான சலுகை ஆகியவை மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

வருகிற பிப்ரவரி 2-ந் தேதி முதல் 7-ந்தேதிவரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு சபைகளிலும் விவாதம் நடைபெறும்.

இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் முதல் 2 நாட்களுக்கு கேள்வி நேரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

விவசாயிகள் பிரச்சினை, வேலை இல்லாத பிரச்சினை, தனியார் மயமாக்கும் விவகாரம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது.

இதற்கிடையே எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நிறைவு பெற்றதும் 7-ந்தேதி பாராளுமன்ற மக்களவையிலும், 8-ந்தேதி மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்து பேச உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெறும். அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் பாராளுமன்றம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...