Sajith Premadasa.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி கனவில் சிலர்!! – சஜித் நெத்தியடி

Share

” ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர்.

அத்தகைய ‘காட்போட்’ ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

43ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தின் மாநாட்டை சம்பிக்க ரணவக்க வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள பின்புலத்திலேயே சஜித்திடமிருந்து இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு விவசாயத்தை முழுமையாக அழித்துள்ளது. எமது ஆட்சியில் விவசாயிகளுக்கு மாநிய விலையில் உரம் வழங்கப்படும். நாம் பலவீனமானதொரு அரசை உருவாக்கமாட்டோம். குழப்பங்களுக்கு வழிவகுக்கும் கூட்டணிகளுக்கும் இடமில்லை. நிச்சயம் அது மக்களுக்கான அரசாக அமையும்.

சிலர் ஜனாதிபதி கனவில் வாழ்கின்றனர். தற்போதே ஆடைகளையும் தைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய காட்போட் ஜனாதிபதிகளுக்கு, என்னைபோல மக்களுக்கு சேவை செய்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” – என்றார் சஜித்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...