Douglas
செய்திகள்அரசியல்இலங்கை

முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிகிறது யதார்த்தம்! – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள்

Share

இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்துகொண்ட யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால், சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில் கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...