marriage parents
இந்தியாசெய்திகள்

தாலியைக் கழற்றி எறிந்து மகளை அழைத்துச்சென்ற பெற்றோர்: உயிரைவிட்ட காதலன்

Share

காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து பிரிந்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (வயது 26) அதேபகுதியைச் சேர்ந்த சிவநந்தினி (வயது 22) என்பவரும் கடந்த 03 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

வழமைபோன்று இவர்களது காதலுக்கும் இருவீட்டார் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து, வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என கடந்த 11ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்தில் பெண் வீட்டார் முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருமணமான அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் கடந்த 19 ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, பெண் வீட்டாரான சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய உறவினர்கள் மிரட்டி, தாலியைக் கழற்றி பொலிஸ் நிலையத்தில் வீசியதுடன், பெண்ணையும் அச்சுறுத்தி வீட்டிற்கு பெண் வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் காதலி பிரிந்த சோகத்தில் இருந்த அரவிந்த்குமார் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சிவனந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் வீசிய எறியப்பட்டு கிடக்கும் காட்சிகள், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர், தாலிக்கட்டி கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஆகியவைகள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...