கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று உயிரிழந்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி ஜகநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதம் (வயது 51) நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2 ஆவது டோஸ் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அன்று இரவு 7 மணியளவில் அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருப்பினும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொவிட் 02 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் அ.தி.மு.க. பிரமுகர் நெஞ்சுவலியால் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#IndiaNews
Leave a comment