Djokovic
செய்திகள்விளையாட்டு

விசா இரத்து: ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய ஜோகோவிச்!-

Share

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் விமான நிலையத்தில் பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேர்பிய வீரரான ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்ற விதிமுறையைக் கடைபிடிக்காமல் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.

ஆனால் அவரது விசா 2 முறை இரத்து செய்யப்பட்டது. டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுப்படி செய்ததுடன், அரசின் முடிவிற்கு சாதகமாகவே நேற்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவுஸ்திரேலிய பொலிசாரின் பாதுகாப்புடன் ஐக்கிய அரபு அமீரக விமான நிலையத்திற்கு சென்ற ஜோகோவிச், பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...