Elephant attack01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயம்!

Share

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

Elephant attack

இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சென்ற துவிச்சக்கரவண்டியை யானை மிதித்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதி வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் போது, இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...