செய்திகள்
அத்துமீறும் சீனா! – அண்டை நாடுகளில் சட்டவிரோத கிராமங்கள்
அண்டை நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சீனா பூட்டானுக்குள் இரண்டு கிராமங்களை சட்டவிரோதமாக நிறுவி வருகின்றமை தொடர்பில் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சீனா வீதி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் சீனா ஒரு முழு அளவிலான கிராமத்தை உருவாக்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை கடந்த நவம்பர் மாதமளவிலேயே கண்டறிந்தோம் என இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே காணப்படும் குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் நடைபெற்றுவரும் இந்த நிர்மாணப் பணி நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#World
You must be logged in to post a comment Login