Sajith help 02
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி சஜித்தினால் வழங்கிவைப்பு!

Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விலேயே சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூபா 24 இலட்சம் பெறுமதியான இந்த இயந்திரத்தை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வை இன்றைய தினம் இடம்பெற்றது.

Sajith help

நிகழ்வில் ஐக்கிய மகிழ்ச்சி சக்தி உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் அகிலதாஸ், கிருபா பியிற்சி கல்லூரி அதிபரும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களில் ஒருவருமான திரு கிருபாகரன், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sajith help 01

மற்றும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களின் அமைப்பாளர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர் என பலரும் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...