Karu Jayasuriya
இலங்கைஅரசியல்செய்திகள்

வெளிநாட்டினரைத் திருமணம் செய்யும் விவகாரம்: இலங்கையைக் கேலிக்கூத்தாக்காதீர்!

Share

இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தைத் தடை செய்வது கேலிக்கூத்தானது.

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கை, நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

மேலும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கை தான் இதுவென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டினரை அரசில் சேர்ப்பதற்காக நாட்டின் அரசியலமைப்பைக் கூட திருத்தியமைக்கும் வகையில் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திய ஆட்சியாளர்களின் இந்த முடிவு முறையற்றது என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே வெளியுலகில் இலங்கையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் முன்னாள் சபாநாயகர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...