Hotel
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

எரிவாயுத் தட்டுப்பாடு: இழுத்து மூடப்பட்ட 12 ஆயிரம் ஹோட்டல்கள்!!

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 4 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

உணவகங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்கள் இருக்கும் நிலையில், அவற்றில், சுமார் 3 ஆயிரத்து 500 வெதுப்பகங்கள், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.

அதனால், நிவாரணம் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வெதுப்பகங்களும் மூடப்படலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...

குருவிட்ட
இலங்கை

குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளின் அமைதியின்மை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள்.

இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து...