Jaffna university.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல்: ஐவர் காயம்

Share

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களிடேயே இடம்பெற்ற துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் மோதலொன்று ஏற்பட்டது.

இதனையடுத்து இதில் தலையிட்ட கோப்பாய் பொலிஸார் நிலைமையை சுமூகமாக்கிய போதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த அந்த மாணவர்கள் மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை நேரத்தில் இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காத போதும், பொலிசாரின் அனுமதி பெற்று பெரும்பான்மையின மாணவர்கள் நிகழ்வை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம்...

12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள்...

13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்...

10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல்...