12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

Share

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள் அறிவிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வலியுறுத்தியுள்ளது.

அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து, அதிகாரசபை 1977 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குறித்து அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெந்தலுவ – பறக்கடுவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த உணவக உரிமையாளர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு ரூபா 100,000 தண்டம் விதிக்கப்பட்டது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...

arested
இலங்கை

நகரசபை உறுப்பினர் கைது – காத்தான் குடியில் சம்பவம்.

  பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய...

hos
இலங்கை

பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களினையும் மூடுவது சிறந்தது – அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஒரு...

anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...