hos
இலங்கை

பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களினையும் மூடுவது சிறந்தது – அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

Share

மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஒரு கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.

தற்போது, டெங்கு நோய் வேகமாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ​​மேல் மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் எழுபதாயிரம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடைந்த பின்னர் பாடசாலைகளையோ, பல்கலைக்கழகங்களையோ மூடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், தற்போது பல மருத்துவமனைகளில் நோயாளர்கள் அதிகமாக இருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நிறுவனங்களை மூடுவதற்கு கல்வி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலம் கடந்த பிறகு மூடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...