Mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லையில் கையெழுத்து வேட்டை!

Share

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் வருகை மற்றும், சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளுக்கு எதிரான கையெழுத்துவேட்டை முல்லைத்தீவில் நேற்று (03) இடம்பெற்றது.

இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கடற்றொழில்களுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே ஒரு இலட்சம் கையெழுத்துகளுக்குமேல் வாங்கி, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்கவேண்டும் என்ற நோக்கோடு உச்சநீதிமன்னில் வழக்கொன்றைத் தொடர்வதற்காக இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இம்முறைக்குரிய இறால் பருவகாலம் அண்மித்துள்ள நிலையில், இந்திய இழவைப்படகுகள் மற்றும், தென்னிலங்கை இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எமது மீனவர்களின் இந்தக் கோரிக்கை வலுப்பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...