sakara
செய்திகள்அரசியல்இலங்கை

காட்டிக் கொடுத்தோரே கட்சியை நடத்துகின்றனர்! – சாகர காரியவசம்

Share

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தர்கள்தான் இன்று அக் கட்சியை வழிநடத்துகின்றனர்.” – என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர் இவ்வாறு, சுதந்திரக்கட்சியை விளாசித்தள்ளினார்.

” அரசு என்ற வகையில் நாம் சில திட்டங்களை முன்னெடுக்கையில் பின்னடைவு ஏற்படலாம். அவ்வாறு சர்ச்சைகள் உருவாகும்போது அதில் சந்தர்ப்பவாத அரசியலை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நடத்திவருகின்றது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

உரப்பிரச்சினையின்போது அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு தாமும் எதிர்ப்பு என சுதந்திரக்கட்சி ‘பல்டி’ அடித்தது. சிலவேளை இத்திட்டம் வெற்றியளித்திருந்தால் அதற்கு தான்தான் காரணம் என மைத்திரிபால சிறிசேன உரிமைகோரி இருப்பார்.

அரசுக்குள் இருந்துகொண்டு, சிறப்புரிமைகளை அனுபவித்தபடியே அவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களின் கொள்கை என்னவென்பது புரியவில்லை. ” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...