Histopathological
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

Share

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவ தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அத்துடன், தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நோய் நிலைமை குறித்து முறையாக பரிசோதிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தனது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாக குறைந்ததாகவும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து, உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொள்ளபடவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...