வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கன மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்தும், அவர்கள் இதுவரையில் வருகை தந்து நிலைமையை ஆராயவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமக்கு ஏதாவது வகையில், உதவ முன்வருமாறு அங்கு வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment