ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து, அதற்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாணந்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே, இவ்வாறு வீதியோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரதேச அரசியல்வாதி, மது போதையில் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இடையூறை விளைவிக்கும் வகையில் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டதால், மக்கள் பிடித்து அவரை மின் கம்பத்தில் கட்டியுள்ளனர்.
அதற்குப்பின்னர், பிரதேச மக்கள், பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், பிரதேச சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
கைதான பாணந்துறை பிரதேச சபை உறுப்பினரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment