செய்திகள்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை !- முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவில் நடைபெறுவதாக தெரிவித்து, அதற்கான தடையுத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடங்களில் இருந்து மாவீரர் நினைவேந்தல் நாளுக்கான நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றன.
பொலிஸாரின் விண்ணப்பத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஜயன்கன்குளம் ஆகிய 07 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 47 பேரு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 27ஆம் நாள் மாவீரர் நினவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login