Susil Premajayantha
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களின் வாழ்க்கை சுமையை வர்த்தமானி வெளியிடுவதால் தீர்க்க முடியாது!

Share

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாரிய இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர் இது இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,  நாட்டில் நிலவும் காலநிலை, உரம் மற்றும் களைநாசினி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ எவரும் புறக்கணிக்க முடியாது.

வர்த்தமானிகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகளை வழங்க முடியாது.

பல நிறுவனங்கள் விலையை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பராமரிப்பதற்கு பொறுப்பாக இருப்பதாகவும், எனவே அத்தகைய பிரிவுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்பான நபர்களுடன் கலந்துரையாடி அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படாததால் பல வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மக்களின் சுமையை குறைக்க பொருத்தமான பொருளாதார மாதிரியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...