ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு காவல்துறையினரால், தேடப்பட்டு வரும் குற்றவாளி, ரனேபுர தேவகே ரனுக எரந்த விஜேதுங்க எனும் 38 வயதுடையவர் என்பதுடன்,
இவரது முகவரி, இலக்கம் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 071 859 1604 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு 071 962 7561 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.