dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

Share

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில், நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.

சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில், அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில், வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில், குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...