bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

Share

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ரொஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய வேளையில் எதிரே வந்த பேருத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...