mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

Share

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு எதிர்பாராதவிதமாக வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.

மேற்படி, விபத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகளும் சக ஊழியர்களும் மண்ணுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...