sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

Share

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி, அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...