donalt drump
உலகம்

ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கு புதிய தலை வலி.

Share

அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில், ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக் தெரிவித்துள்ளதுடன், கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.

இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ் அனலிடிக்ஸ் கணித்துள்ளது.

அத்துடன், போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத் வலியுறுத்தியுள்ளார்.

இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...