வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
” அரசால் எமது கட்சிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன. புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றன. எனவே, முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். ” – எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment