11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

Share

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற வளாகத்தின் தற்போதைய நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் பல நீதிவான்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அமைச்சர் நடத்தினார். இதன்போது, நீதிமன்ற வளாகத்தின் மீள்நிர்மாணப் பணிகளை அடுத்த ஐந்து மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தின் மின் உயர்த்திகள் (Elevators) மற்றும் குளிரூட்டி தொகுதிகள் (Air Conditioning Systems) முற்றாகச் செயலிழந்துள்ள நிலையில், அவற்றை உடனடியாகப் பழுதுபார்த்து இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கியமான ஆவணக் காப்பகங்கள் மற்றும் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளைப் நவீனமயப்படுத்துவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது. வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அவற்றை மீள்நிர்மாணம் செய்யும் பணிகள் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தினால், கண்டி நீதிமன்ற வளாகத்தின் கீழ் தளத்தில் இருந்த பல ஆவணக் காப்பகங்கள் நீரில் மூழ்கியதில் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் மற்றும் நூலகத்திலிருந்த சுமார் 100,000 புத்தகங்கள் சேதமடைந்தன. ஆவணங்களை மீட்பதற்காகத் தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆவணங்களை உறையவைக்கும் கொள்கலன்களில் வைத்துப் பாதுகாக்கும் முயற்சிகள் மற்றும் வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விஜயத்தில் நீதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். கண்டி நீதிமன்ற வளாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, விரைவாக இயல்பு நிலைக்குத் திருப்புவதே தற்போதைய பிரதான நோக்கம் என அமைச்சர் வலியுறுத்தினார். டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஒருங்கிணைந்த திட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த மீள்நிர்மாணப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...