25 690810a1a0ba8
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீடிப்பு: தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டது – பிரதமர் ஹரிணி அமரசூரிய விளக்கம்!

Share

பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவானது, தொழிற்சங்கங்கள் உட்படத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளியாப்பிட்டியவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,

“இந்த வருடம் முழுவதும் நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடினோம். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடனும் உரையாடினோம். அதன் விளைவாகவே பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமைச்சு இது குறித்து ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. இதை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து ஒரு மாதிரி கால அட்டவணை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வெவ்வேறு கருத்துகள் வருவது பொதுவானதாகும். இதைச் செயல்படுத்த முடியாது என்பதற்கு அடிமட்ட அளவில் அதிக எதிர்ப்பு இருப்பதாக நான் காணவில்லை,” எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பாடசாலை அதிபர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் ஆகியன தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன:

எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று (நவம்பர் 03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ, இந்த முடிவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கோரினார்.

இந்த முடிவு தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பன்னசேகர தேரர் கூறினார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...