23 63baa36d78977
இலங்கைசெய்திகள்

பலப்படுத்தப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோள் .

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை,உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர், முன்னதாக, பாதுகாப்புக்கோரி, காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரை தெரிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி காவல்துறை பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...