கோட்டாவுக்கு கிளாஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இங்கிலாந்து, கிளாஸ்கோ நகரில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு செய்யும் பணிக்கு, பொதுமக்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனையடுத்து இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலையாளியை சர்வதேசத்தின் முன் நிறுத்து என்று கூறிய விடயங்கள், தமிழர்களால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு சென்றிருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிலைநிறுத்தப்பட வேண்டியவர்கள் இன்று தாயகத்தை சூறையாடும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்று தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மேலும் இவ்வாறு கூறியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment