15 8
இலங்கைசெய்திகள்

உக்ரைன் மீது ரஸ்யா மிகப்பெரும் தாக்குதல்! உக்ரைன் F-16 போர் விமானி பலி

Share

உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஸ்யா இன்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் குறைந்தது ஆறு மாகாணங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தளங்கள் சேதமடைந்துள்ளன.

லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வீடுகள், செர்காசியில், பல மாடி கட்டடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்ததில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் பகுதியில் ஒரு பெண் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஏழு வான் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கடைசி இலக்கைச் சுடும் போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த மேற்குலக நாடுகளின் கூடுதல் ஆதரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....