Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Share

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு சுமார் 09 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக விமல் வீரவங்ச உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம்(25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கு தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...