rohitha
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை! – ரோஹித அதிரடி

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நானும் அமைச்சரவையில் இருக்கின்றேன். விமல் வீரவன்ச குறிப்பிடுவதுபோல அமைச்சரவையில் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இடங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டம், ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் போன்ற இடங்கள் இருக்கையில் வெளியில் சென்று பேசுவது, ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

நாம் தான் அரசுக்குள் தலைமைக்கட்சி. பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை. கூட்டணி என்றால் சிறு குழப்பம் இருக்கும். எப்படி இருந்தாலும் நாம் முன்னோக்கி பயணிப்போம்.” -என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...