17 18
இலங்கைசெய்திகள்

மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி

Share

மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  (Anura Kumara Dissanayake) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  , இன்று (15.01.2025) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளார்.

பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...