இலங்கைசெய்திகள்

சீனாவில் பரவும் வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல! பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு

Share

சீனாவில்(China) பரவி வரும் எச்.எம்.பி.வி(HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல அதேவேளை, புதிய வைரஸும் அல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“குளிர்காலத்தில் இவ்வாறான சுவாச நோய்கள் ஏற்படுவது வழமையானதாகும். ஆனால், இது பொது சுகாதார அவசர நிலைமைக்குக் காரணமாக அமையாது.

அந்தவகையில் தற்போது சீனாவில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

இதன் அறிகுறிகளில் இருமல், சளி அல்லது மூக்கில் அடைப்பு, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும். கடுமையான சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவாக அதிகரிக்கும்.

2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட இது ஒரு புதிய வைரஸ் அல்ல. இது பொதுவாக சளி அல்லது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகின்றது.

சில சமூக ஊடகப் பதிவுகள் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. ஆனால், சீனா அல்லது உலக சுகாதார ஸ்தாபனம் பொது சுகாதார அவசரகால நிலையை அறிவிக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...