6 2
இலங்கைசெய்திகள்

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Share

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

வவுனியா (Vavuniya) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02.01.2025) இடம்பெற்றது.

குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கனகராயன்குளம் தெற்கு அபிவிருத்தி சங்கத்தின் காணியை காவல்துறையினரின் பாவனையில் இருந்து விடுவித்தல், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனையடுத்து அதற்குரிய தீர்மானங்களும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், து.ரவிகரன், முத்துமுகமது, மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், காவல்துறையினர், இராணுவ உயர் அதிகாரி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...